Advertisment

அதிர வைக்கும் நிஜ சேஸிங்... 22 கிலோமீட்டர் துரத்திச் சென்று மாடு திருட்டு கும்பலைப் பிடித்த போலீசார்!

the police who chase 22 kilometers and catch the cow-stealing gang!

மாடு திருடும் கும்பலை 22 கிலோமீட்டர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்த போலீசாரின் சேஸிங் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

the police who chase 22 kilometers and catch the cow-stealing gang!

ஹரியானா மாநிலம் குருகிராமில் மாடுகளை கடத்திக்கொண்டு ஒரு கும்பல் வாகனத்தில் கிளம்பியது. பசுக்கள் திருடப்பட்டு ஏற்றிச்செல்வதை அறிந்த ஹரியானா சிறப்பு காவல்படையினர் அந்த வாகனத்தைத் துரத்தி சென்றனர். அப்பொழுது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்த கும்பல் வண்டியில் இருந்த பசுக்களை சாலையில் தள்ளி விட்டுவிட்டு வேகமாய் பறந்தன. பின்தொடர்ந்து வந்த போலீசாரின் வாகனத்தைத் திசைதிருப்ப கொள்ளையர்கள் முயன்ற போதிலும் போலீசார் விடாப்பிடியாக துரத்தி சென்றனர். ஒருகட்டத்தில் போலீசார் மாடு திருடும் கும்பல் சென்ற வாகனத்தின் சக்கரத்தை சுட்ட நிலையில் சக்கரம் கழண்டோடியது இருப்பினும் வாகனத்தை நிறுத்தாமல் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். இப்படி தொடர்ந்து 22 கிலோ மீட்டர் சேஸ் செய்து அந்த கொள்ளை கும்பலை போலீசார் பிடித்து கைது செய்தனர். போலீசார் கொள்ளையர்களை பின்தொடரும் வீடியோ காட்சிகள் சினிமாவில் வரும் காட்சிக்கு நிகராக உள்ளதாக பகிரப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

police haryana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe