/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pencils.jpg)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளபள்ளிகள் முழுவதும் இளஞ்சிவப்பு பெட்டிகளை நிறுவி, மாணவர்கள் தங்களது பிரச்சனைகளைப் புகாராக தெரிவிக்கலாம் என்று போலீசார் கூறியிருக்கின்றனர். அதன்படி, ஒவ்வொரு வார செவ்வாய்க் கிழமை நாளில் போலீசார் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று புகார் பெட்டிகளில் சேகரிக்கப்பட்ட புகார்கள் குறித்து ஆய்வு செய்ய செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, ஹர்தோய் பகுதியில் பள்ளியில் உள்ள புகார்களை ஆய்வு செய்வதற்காக அப்பகுதி போலீசார் இன்று அப்பள்ளிக்குச் சென்றுள்ளனர். அதன்படி, புகார் பெட்டிகளில் உள்ள புகார்களை ஒவ்வொன்றாக சரி பார்த்து வந்தனர். அதில் மாணவர் ஒருவர், தனது வகுப்பு தோழன் தனது பென்சில் ஷார்பனரை திருடியதாக, புகார் பெட்டியில் கடிதம் வாயிலாக புகார் அளித்திருந்தை போலீசார் கண்டனர்.
பென்சில் ஷார்பனர் திருடியது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதை அறிந்த போலீசார், இந்த வழக்கை தங்களது கவனத்தில் கொண்டு வந்தனர். இந்த வழக்கில் பென்சில் ஷார்பனர் கிடைக்கவில்லை என்றாலும், இருதரப்பின் நியாயத்தையும் கேட்டு போலீசார், இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)