Advertisment

காவல் நிலையத்திற்குள்ளேயே காவல் அதிகாரிக்கு அடி, உதை! 

police station police incident youth

உத்தரப்பிரதேசம், மியான்புரியில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் காவல்துறை அதிகாரியைக் கடுமையாகத் தாக்கும்காட்சிகள் வெளியாகியுள்ளன. இளம் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்த இளைஞர், பின்னர் கைகளால் தாக்கத் தொடங்கினார். பின்னர், அங்கிருந்த நாற்காலியையும் எடுத்தும் தாக்கினார். அதைத் தொடர்ந்து, அவரை காவல்துறை அதிகாரியும் பதிலுக்குத்தாக்கினார். இதனால் அருகில் இருந்தவர்கள் திகைத்து நின்றனர்.

Advertisment

குடும்பப் பிரச்சனை காரணமாக, இளைஞருக்கு அறிவுரைக் கூற காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது தான் இந்த கைகலப்பு நிகழ்ந்தது. அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாகவும், அதற்கான ஆவணங்களைத் தரும் பட்சத்தில் அதைக் கொண்டு இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பான, வீடியோ காட்சி வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

uttarpradesh police incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe