Advertisment

குட் டச்.. பேட் டச்... குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை!

குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் நன்கு அறிந்தவர்களே இதுமாதிரியான தொந்தரவுகளைக் கொடுக்கின்றனர்.

Advertisment

telangana

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்நிலையில், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வதுஎன்பது குறித்த விழிப்புணர்வினை தெலுங்கானா காவல்துறையினர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியுள்ளனர். மொஹல்லா கிரிக்கெட் போட்டி என்ற நிகழ்ச்சியின் மூலம் அங்கு கூடும் குழந்தைகளுக்கு இந்த விழிப்புணர்வு வகுப்பினை அவர்கள்நடத்தியுள்ளனர்.

‘போக்ஸோ சட்டம் பதியப்படுவது நாளுக்கு நாள்அதிகரித்து வருவது வேதனைக்குரியது. எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கும்போது அவர்கள் வாய்திறந்து பேச இந்த வகுப்பு உதவும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம். இந்த வகுப்பில் குட் டச் மற்றும் பேட் டச் இடையே உள்ள வித்தியாசங்கள், பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும்போது யாரிடம் அதுகுறித்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சொல்லித்தரப்பட்டன’ என சுல்தான் பஜார் பகுதியின் துணை ஆணையர் எம்.சேதனா தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரே முன்வந்து நடத்திய இந்த வகுப்புகள் பெற்றோரிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் தாங்களே முன்வந்து தங்கள் குழந்தைகளை இந்த வகுப்புகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

campaign Child abuse Child rape telangana
இதையும் படியுங்கள்
Subscribe