Advertisment

உ.பி போலிசார் என் கழுத்தை பிடித்து தள்ளினார்கள் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் போராட்டத்தில் போலிஸ் தடியடி நடத்திய சம்பவங்களும் நடைபெற்றன.

Advertisment

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான 76 வயது உடைய தாராபுரி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க பிரியங்கா காந்தி நேற்று உ.பி சென்றார். ஆனால் அவர் சென்ற வாகனத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து தொண்டர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஏறிய பிரியங்கா காந்தி அவரை சந்திக்க சென்றார். கடுமையான போலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் பிரியங்கா காந்தி அவரை சந்தித்தார். இந்நிலையில், உ.பி போலிசார் என் கழுத்தை பிடித்து தள்ளினார்கள் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

priyanka gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe