Police saved a soldier who tried to board a moving train

Advertisment

கேரளா மாநிலம், திருச்சூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ராணுவ வீரரை ரயில்வே போலீஸார் பாதுகாப்பாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் மார்டின். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த மார்டின், தனது சொந்த வேலைக்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த ரயில் திருச்சூர் ரயில் நிலையத்தில் நின்ற போது தண்ணீர் குடிப்பதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கியுள்ளார் மார்டின்.

அப்போது ரயில் திடீரென்று புறப்பட்டது. இதனை கண்ட மார்டின், ரயிலில் ஏற முயன்ற போதுரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே போலீஸார் விரைந்து சென்று அந்த ராணுவ வீரரை எந்தவித உயிர்ச்சேதமின்றி பாதுகாப்பாக மீட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.