police provide protection to tomatoes after lorry loaded with tomatoes overturned.

Advertisment

தெலுங்கானாவில் தக்காளி ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி கவிழ்ந்ததைத் தொடர்ந்து தக்காளிக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்து டெல்லிக்கு 18 டன் தக்காளிகளை ஏற்றிற்கொன்று லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. தெலுங்கானாமாநிலம் மாவ்லாபத் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளானது. அதில் ஓட்டுநர் இருவருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் முழுவதும் கீழே விழுந்து வீணாகின. இதையடுத்து கீழே விழுந்த தக்காளியை யாரும் திருடி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.