Advertisment

கரோனா மன அழுத்தத்தை குறைக்க பாரம்பரிய நடனமாடிய காவலர்கள்!

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 18000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

jk

இந்த ஊரடங்கு காலத்தில் காவலரின் பணி என்பது மெச்ச தகுந்த விதத்தில் இருந்து வருகின்றது. இரவு பகல் பாராமல் அவர்கள் தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்திலும் கரோனா தொற்று இருந்து வருகிறது. அங்கு30க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதற்கிடையே கரோனா காரணமாக மன அழுத்தத்தில் பணி செய்து வரும் காவலர்கள், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று அம்மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹூ நடனத்தை ஆடினார்கள். தொடர் பணி சுமையில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு மாறுதலாகவும், புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாகவும் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe