/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_1020.jpg)
அசாம் மாநிலம் ஸ்ரீ பூமி மாவட்ட சிறையில் ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா என்ற இருவர் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சிறை அருகே உள்ள காவலர்கள் குடியிருப்பில் தங்கிப் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் சிறை அருகே உள்ள தெருவில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.
இதனைக் கவனித்த காவலர்கள் ஹரேஷ்வர் கலிதா கஜேந்திரா கலிதா இருவரும், தெருவில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்ணை குடியிருப்பு வளாகத்திற்குள் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். பின்பு அங்கு வைத்து இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இளம்பெண் கத்தி கூச்சலிட்டு விடாத காவலர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு காவலர்களையும் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)