நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி வீதிகளில் நடமாடியவர்களைத் தோப்புக்கரணம் போடவைத்து வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர் மஹாராஷ்ட்ரா காவல்துறையினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மஹாராஷ்ட்ராவில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மளிகை பொருட்கள், பால், மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கை மீறி வீதிகளில் நடமாடியவர்களைத் தோப்புக்கரணம் போடவைத்து வீட்டிற்கு அனுப்பி வருகின்றனர் மஹாராஷ்ட்ரா காவல்துறையினர்.