Advertisment

குடிக்க தண்ணீர் கேட்ட நபரை ஆசிட் குடிக்க வைத்த போலீசார்!

The police made the youth who asked to drink water drink acid in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர சிங்.கடந்த 14ஆம் தேதியன்று சைட் நாக்லி காவல் நிலையத்திற்கு வெளியே இரு தரப்பினர் போட்ட சண்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த சண்டையை தர்மேந்திர சிங் தலையிட்டு தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும். தர்மேந்திர சிங்கை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisment

போலீஸ் காவலில் இருந்த தர்மேந்திர சிங்கை போலீசார் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தாகத்தில் இருந்த தர்மேந்திர சிங், போலீசாரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த போலீசார் அவரை ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதனால், தர்மேந்திர சிங் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Advertisment

இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கோரிக்கை வைத்துள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்ட நபரை ஆசிட் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

acid police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe