சிக்னல் நிற்கும்போது சிலர் ஹாரன் அடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். சிக்னலில் பச்சை விளக்கு எரிய 10, 15 வினாடிகள் இருக்கும்போதே அவர்கள் இந்த சத்தத்தை எழுப்புவார்கள். அவர்களுக்காகவே தற்போது மும்பை போலிசார் புதிய முறையை சிக்னல் விளக்குகளில் புகுந்தியுள்ளார்கள். அதன்படி, தேவையில்லாமல் சாலையில் ஹாரன் அடித்தால் அதனுடைய நேரம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் செட்டிங்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

Advertisment

தி பினிஷிங் சிக்னல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, டிராபிக் சிக்னல் உடன் புதிய டெசிபெல் கருவிகளை போலிசார் பொருத்தியுள்ளனர். அதன்படி சிவப்பு விளக்கு எரிவதற்கு முன் யாராவது சாலையில் காத்திருப்பவர்கள்ஒலி எழுப்பினால் மீண்டும் சிவப்பு விளக்கு முதலில் இருந்து எரிய ஆரம்பிக்கும். இதனால் மீண்டும் சாலையில் நிற்பவர்கள் முதலில் இருந்து காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த திட்டத்தால் தற்போது சாலையில் யாரும் ஒலி எழுப்புவதில்லை என்று மும்பை போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.