ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம் விதித்த போலீசார்!

The police fined the pedestrian for not wearing a helmet

மத்தியப் பிரதேச மாநிலம், பன்னா மாவட்டம், அஜய்கர் பகுதியைச் சேர்ந்த சுசில் குமார் சுக்லா, தன்னுடைய மகள் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக தனது விருந்தினர்களை அழைக்க சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சில போலீசார், சுசில் குமார் சுக்லாவை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி அஜய்கர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை சிறிது நேரம் போலீஸ் காவலில் வைத்ததாகவும், அவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்களின் பதிவு எண்ணை எழுதி அவருக்கு ரூ.300 அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சுக்லா, பன்னாவுக்குச் சென்று நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (எஸ்டிஓபி) ராஜீவ் சிங் பதாரியா தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

fine helmet
இதையும் படியுங்கள்
Subscribe