modi - sundar pichai

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தஒருவர், "பிரதமர் மோடியைஅவதூறு செய்யும்வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனக்குதொலைப்பேசி மூலமாக8,500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்தது" என அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கூகுள்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை,கூகுள்நிறுவனஊழியர்கள் மூன்று பேர் உள்பட 17 பேர் மீது உத்தரப்பிரதேச போலீஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

விசாரணைக்குப் பிறகு, இந்த வீடியோதொடர்பான வழக்கில்சுந்தர்பிச்சைக்கும், மற்ற கூகுள் நிறுவன ஊழியர்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிய வந்ததையடுத்து, அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேநேரத்தில் வீடியோகுறித்தும், அதற்குஎதிர்ப்பு தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகஉத்தரப்பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.