Police caught him distributing laddus to A criminal who escaped after being released on parole;!

தலைநகர் டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் (40). தனது மனைவி மீத சந்தேகமடைந்த கைலாஷ், கடந்த 2011ஆம் ஆண்டு மனைவியைக் கொலை செய்தார். இந்த வழக்கில், தப்பியோடிய கைலாஷை மத்திய பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைலாஷுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனை அனுபவித்து வந்த கைலாஷுக்கு, கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது மூன்று மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த 2021ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த கைலாஷ், மீண்டும் சரணடையாமல் தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், கைது செய்வதை தவிர்ப்பதற்காக கைலாஷ், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி சென்றுள்ளார்.

அதன்படி, டெல்லியில் ஒரு வருடம், ஹரித்வாரில் இரண்டு வருடம் என ஒவ்வொரு இடத்திலும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலை வைத்து, கைலாஷை பிடிக்க போலீசார் ஒரு திட்டத்தை வகுத்தனர். குடியரசு தினத்தன்று, கிராம மக்களுடன் கலந்த போலீசார் ஒவ்வொரு வீட்டிற்கு லட்டுவை வழங்கி வந்துள்ளனர். அதில், குற்றவாளி கைலாஷை அடையாளம் கண்டு அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.