Skip to main content

வண்டியை தவிர எந்த ஆவணமும் இல்லை... 23,000 அபராதம் விதித்த போலிசார்!

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

கடந்த ஜூலை 2019ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மோட்டார் வாகனச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மோட்டார் வாகனச்சட்டம் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த இரண்டாவது நாளில், டெல்லி குர்கானைச் சேர்ந்த ஒருவர் எந்த வித ஆவணங்களும் இன்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக, அவருக்கு 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

jhfg



டெல்லியை சேர்ந்தவர் தினேஷ் மதன். இவர் ஹரியானா மாநிலம் குருக்ராமில் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை காட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம், வாகனப்பதிவு புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அதோடு, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்தது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, வாகனப்பதிவு சான்று இல்லாமல் இருந்தது என்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 23,000 ரூபாயை  காவல்துறையினர் அபராதமாக விதித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது காவல்துறையினர் வழங்கிய ரசீதுதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Traffic diversion on OMR Road

சென்னை ஓஎம்ஆர் சாலையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஓஎம்ஆர் சாலையில் சோதனை அடிப்படையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

மேலும் காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ்காந்தி சாலையில்) திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையிலிருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய ‘யூ’ திருப்பத்தில் (U Turn) சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திருத்தப்பட்ட அபராதம்; தீவிர சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலர்கள் (படங்கள்) 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

இன்று முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அரும்பாக்கம் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய நபர்களிடம் அபராதம் வசூலித்தனர்.