Police baton during New Year celebration

புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். மெரினா கடற்கரையினை ஒட்டியுள்ள காமராஜர் சாலை, ரிசர்வ் வங்கி அருகே மூடப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி 90 ஆயிரம் காவல்துறையினரும் 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

அதேபோல் புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாககொண்டாடப்பட்டு வருகிறது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டினை கொண்டாடகடற்கரை சாலையில் மக்கள் அதிகளவில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Advertisment