Skip to main content

வாடகை கேட்டு இளைஞருக்கு டார்ச்சர் - முன்னாள் ஆசிரியர் கைது!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

இளைஞரிடம் வீட்டு வாடகை கேட்டு தொந்தரவு செய்த முன்னாள் பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தொடுபுழாக்கு அருகில் உள்ள கிராமம் முட்தலைகோட்டா. இங்கு மாத்யூ என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தாமஸ் என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். தாமஸ் அரசு பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாத்யூ அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். கரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் மாத்யூவுக்கு கடந்த சில வாரங்களாக வேலை இல்லை. வருமானம் சிறிதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அரசு கொடுத்துள்ள இலவச அரிசியை வைத்து உணவருந்திவந்த அவரிடம் இந்த மாத வாடகையை கொடு என்று வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார்.

  g



வேலைக்கு செல்லாததால் இந்த மாதம் வாடகையை கொடுக்க முடியவில்லை, அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என்று மாத்யூ கூறியுள்ளார். ஆனால் இதனால் கோபமான அவர் மாத்யூவிடம் தினந்தோறும் அவர் வாடகை கேட்டுள்ளார். மேலும் அவர் இல்லாத நேரத்தில் அவரின் சாமான்களை வீட்டின் வெளியே எடுத்து வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துள்ளார். தொடர்ந்து அவரின் டார்ச்சர் அதிகமாகவே அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மன உளைச்சல் ஏற்படுத்திய தாமஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்