/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ka_11.jpg)
4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நபரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வரும் 4 வயது பெண் குழந்தையை, கமல் கிஷோர் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்து தப்பித்துச் சென்றுள்ளர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கமல் கிஷோரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். கமல் கிஷோர் இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். தன்னைச் சுற்றி போலீசார் இருப்பதை உணர்ந்த கமல் அங்கிருந்து தப்பிக்க முயன்று காவல்துறையை நோக்கு சுட முயன்றார். உடனடியாக தற்காப்புக்காகம் போலீசார், கமல் கிஷோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கமல் கிஷோர் காயமடைந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். குற்றம் சாட்டப்பட்ட கமல் கிஷோர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதால் அவர் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கமல் கிஷோரை 24 மணி நேரத்திற்குள் போலீஸ் பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)