Police are actively investigating a bank robbery in a novel way

கர்நாடகாவின் மணகுலியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ரூ. 53 கோடி மதிப்பிலான தங்கமானது கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ரூ. 5.2 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவமானது கடந்த 23ஆம் தேதி அரங்கேறியுள்ளது. வங்கியின் லாக்கரில் இருந்து 59 கிலோ எடைகொண்ட 1373 தங்கப் பொட்டலங்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து மே 25ஆம் தேதி தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் இந்நிலையில் போலீசாரின் கவனத்தைத் திசை திருப்பப் பில்லி சூனியம் வைத்தது போன்ற கருப்பு நிற பொம்மையைக் கொள்ளையர்கள் வங்கியில் வைத்துச் சென்றிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மே 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி 10 நாட்களாகியும் கொள்ளையர்கள் குறித்துத் துப்பு துலக்க முடியாமல் கர்நாடக மாநில போலீசார் திணறி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வங்கியில் இருந்த சி.சி.டி.வி., என்.வி.ஆர். யூனிட் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றைச் செயலிழக்கச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.