காஷ்மீர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 101 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு தீவிரவாதிகள் 23 பேர் அடங்குவர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 75% காஷ்மீர் மாநில உள்ளூர் இளைஞர்களை சேர்ந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க ராணுவம் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டால், மற்றொரு புறம் உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

KASHMIR

Advertisment

Advertisment

இது குறித்து ஆளுநர் சத்யா பால் மாலிக் கூறும் போது "பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை கொல்வது தான் எங்கள் முதல் பாணி, ஆனால் தீவிரவாத இயக்கங்களின் இளைஞர்கள் சேருவதால் அவர்கள் அதிகளவில் என்கவுண்டர் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது" என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 246 தீவிரவாதிகளை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதில் சுமார் 60% தீவிரவாதிகள் காஷ்மீர் உள்ளூர் இளைஞர்கள் ஆவர். இந்திய ராணுவமும் தொடர்ந்து காஷ்மீர் இளைஞர்களை ராணுவத்தில் பணி அமர்த்தும் நிகழ்வு தொடர்ந்து வந்தாலும், தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேருவதை தொடர்கின்றனர்.இது தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைளை எடுக்க ராணுவம் தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.