Police Action Teacher hits student for not completing homework in bihar

வீட்டுப்பாடம் எழுதி வராத மாணவரை, ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த பள்ளியில் அமித் ராஜ்(12), 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisment

அமித் ராஜ், ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தை எழுதாமல் பள்ளிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர், அமித் ராஜை பலமாக தாக்கியுள்ளார். இதில், அந்த மாணவனின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அமித் ராஜ் தனது வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அமித் ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், மாணவரை தாக்கிய ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அமித் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘நவம்பர் 13-ம் தேதி வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் என்னை கட்டையால் அடித்ததில் எனது இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் கூறி, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்’ என்று கூறினார்.

Advertisment