Advertisment

கழிவறை வழியாக வீடுகளுக்குள் பரவிய விஷ வாயு; 3 பேர் உயிரிழப்பு

poisonous gas spread through the toilet; 3 people lost their lives

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து கசிந்த விஷவாயு கழிவறை மூலம் வீடுகளுக்குள் பரவியதால் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற சென்றமகளும் வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்திருக்கிறார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. காரணமே தெரியாமல் இருவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்பாதாள சாக்கடை கழிவுநீ தொட்டியில் இருந்து பரவிய விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வீட்டுக்குள் பரவியதால் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisment

இதேபோல பக்கத்து தெருவில் உள்ள வீட்டில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குள் சென்ற நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அந்தபகுதி மக்கள் அச்சத்துடன் மாஸ்க்குடன் வலம் வருகின்றனர். இந்த தகவல் அந்த பகுதியில் தீயாய் பரவ அந்த பகுதியிலிருந்த அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால்அங்குபரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயு கழிவறை வழியாக வீட்டுக்குள் புகுந்து மூன்று பெண்கள் உயிரிழந்தது புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விஷவாயுவின் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் வருவாய்த்துறையினர்,காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேற மைக் மூலம் போலீசார் அறிவித்துவருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் விவரம் பாக்கியலட்சுமி (15) வயது சிறுமி, செந்தாமரை (72) அவருடைய மகள் காமாட்சி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

accident gas Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe