Advertisment

மூன்று பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!

pocso Case registered against Malayalam news channel 3  journalists

Advertisment

பிரபல மலையாள சேனலில் பணியாற்றும் 3 பத்திரிகையாளர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அண்மையில் மாநில அரசு சார்பில் பள்ளி விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வினை மலையாளத்தின் பிரபல சேனல் ஒன்று ஒளிபரப்பு செய்த போது, அந்நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் இருவர் மாணவி குறித்து ஆபாச சைகை மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பலரையும் முகம் சுழிக்கவும் வைத்துள்ளது.

இந்த நிலையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தது. அதனடிப்படையில் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார்இரு பத்திரிகையாளர்கள் சிறுமி குறித்து பாலியல் ரீதியான கருத்துகளை தெரிவித்ததை உறுதி செய்தனர். அதன்பிறகு,நேற்று(16.1.2025) இரு பத்திரிகையாளர்கள் மற்றும் அதனை ஒளிபரப்பியதற்காக சேனலின் முதுநிலை ஆசிரியர் ஆகியமூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

journalists Kerala POCSO
இதையும் படியுங்கள்
Subscribe