Advertisment

பிரிஜ்பூஷண் சரண் சிங் மீதான போக்ஸோ வழக்கு ரத்து? 

POCSO case against Brijbhushan Charan canceled?

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப்பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த விவகாரத்தில் வீரர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். பின் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வீரர்களுடன் கடந்த 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 15 ஆம் தேதிக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று (15 ஆம் தேதி) டெல்லி காவல்துறை, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீதான போக்ஸோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

wrestlers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe