பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கான செலவு பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மும்பையை சேர்ந்த அனில் கல்கரி என்ற சமூக செயற்பாட்டாளர் கோரியிருந்தார்.

Advertisment

pmo did not know about prime minister expenses on domestic travel

இதற்கு பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அதிகாரி (சிபிஐஓ) பிரவீன் குமார் பதில் அளித்துள்ளார். அது பற்றிய அவரது பதிலில், "பிரதமரின் உள்நாட்டு பயணச் செலவுக்கான ஆவணங்கள் எங்களிடம் இல்லை. இந்த செலவுகள் ஒரே துறையின் கீழ் வருவதில்லை. பிரதமரின் பயண ஏற்பாடுகளை பல்வேறு துறைகள் மேற்கொள்கின்றன. அவை செலவு செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சார பயணங்களுக்கு பிரதமர்அலுவலகம் செலவு செய்வதில்லை. எனவே பிரதமரின் உள்நாட்டு பயணச் செலவு தொடர்பான விவரங்கள் எங்களிடம் இல்லை. மேலும் பிரதமரின் வெளிநாட்டுப் பயண செலவு விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். பிரதமரின் உள்நாட்டு பயண செலவு எவ்வளவு என பிரதமர் அலுவலகத்துக்கே தெரியாதா என இது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">