Advertisment

தடுப்பூசி செலுத்திக்கொண்ட தலைவர்கள்! - கட்டணம் செலுத்தவுள்ள மத்திய அமைச்சர்கள்!

modi venkaiah naidu

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகநாடு முழுவதும்கரோனாதடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்குக் கரோனாதடுப்பூசி போடப்படும் திட்டமானது முதற்கட்டமாகஅமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்றிலிருந்து (01.03.2021) 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனாதடுப்பூசிசெலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில், இன்று காலைபிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அதனையடுத்து இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சென்னைஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனாதடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். அதேபோல்ராஜஸ்தான் மாநில ஆளுநர்கல்ராஜ் மிஸ்ராவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Advertisment

பிரதமரைதொடர்ந்து மத்திய அமைச்சரானஜிதேந்திர சிங்கும், டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். மேலும் பீகார்முதல்வர் நிதிஸ் குமார், ஒடிசாமுதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோரும்இன்று கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். மத்திய அமைச்சர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக்கொள்ள உள்ளனர். மத்திய அமைச்சர்கள் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தெரிவித்துள்ளார்.

coronavirus vaccine Venkaiah Naidu Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe