பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் கட்டுரை போட்டியில் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து சிறந்த கட்டுரையை சமர்ப்பிக்கும் 66 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். மேலும் மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஜனவரி 16- ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.