காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்ட பிறகு, மக்களுக்கு மின்சாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றும் மத்திய அரசின் முடிவு தற்காலிகமானதே என்று காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் கூறினார். உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் மாற்றப்படும். பயங்கரவாதம், பிரிவினைவாதிகளிடமிருந்து ஜம்மு காஷ்மீரை நாம் அனைவரும் இணைந்து பாதுகாப்போம். நாம் அனைவரும் இணைந்து புதிய ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை உருவாக்குவோம்.
லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றும், மாற்றுக் கருத்தை மதிக்கிறோம். ஆனால் தேச விரோத செயல்களை ஆதரிக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தார் பிரதமர் மோடி. காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் படி, படியாக குறையும். ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மேலும் ஜம்மு காஷ்மீர் மக்கள் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விரைவில் சிறப்பான வளர்ச்சியடையும், காஷ்மீர் சிறக்கும் என கூறி தனது உரையை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை இரவு 08.00 மணிக்கு தொடங்கி 8.39 மணிக்கு நிறைவு செய்தார்.