PM Narendra Modi got blessing from coimbatore old lady

Advertisment

சர்வதேச சிறுதானியங்கள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று துவங்கியது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த கருத்தரங்கில் நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் மோடியைச் சந்தித்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து பிதமர் மோடி, பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.