இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக பதவியேற்றவுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அதில் இளைஞர்களின் ஊதியம் மற்றும் கல்வி தொடர்பாக சில முக்கிய முடிவுகளை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து திட்டங்களைவகுக்க மத்திய அமைச்சர்கள் கொண்ட இரு குழுக்களை ஏற்படுத்தினார். ஒரு குழு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கவும், மற்றொரு குழு இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும். அதே போல் இந்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கென புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.