மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் வருகை தந்தார். பிரதமரை ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் தங்கிய பிரதமர் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம், குருவாயூருக்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திரமோடி, கிருஷ்ணன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

Advertisment

MODI VISIT MALDIVES

கேரள பயணத்தை முடித்து கொண்டு இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக பதவியேற்றவுடன் பிரதமர் நரேந்திர மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அதனைத் தொடர்ந்து நாளை இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மாலை திருப்பதியில் தரிசனம் செய்கிறார்.