Skip to main content

மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

pm narendra modi and vice president discussion with governors

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

 

அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து கேட்டறிகின்றன. இதன் பிறகு மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
 Minister of Tamil Nadu welcomed the Vice President

குடியரசு துணைத் தலைவர் 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு குடும்பத்தினருடன் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் தரிசனம் செய்வதற்கு 2 ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தடைந்தார்.

தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, தமிழகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை தெரிவித்து தமிழக முதல்வரின் சார்பாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து  அவருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். கோவில் வாயிலிருந்து கோவிலில் உள்ள 21 படி வரை மின்கல வாகனத்தில் சென்றார். பின்னர் குடும்பத்துடன் கோவில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். துணை குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களுக்கு அனுமதி  இல்லை. இவர் வருகையையொட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்கள் யாரையும் காலை 7:00 மணி முதல் 11 மணி வரை அனுமதிக்கவில்லை. மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தரிசனம் செய்வதற்குத் தமிழக அரசு மற்றும் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக குடியரசு துணைத் தலைவர்  நன்றி தெரிவித்துச் சென்றார்.

Next Story

நக்கீரன் செய்தி எதிரொலி; குடியரசுத் துணைத் தலைவர் பயணத்தில் மாற்றம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Vice President visit to Purnagiri temple canceled due to Nakkeeran news

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்ய புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். இவரை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு குடியரசுத் துணை தலைவர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவில் பொதுக் கோவிலாகும். இதனை பாஜக பிரமுகரான சீனிவாசன் என்பவர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வர்மக்கலை சித்த மருத்துவம் உள்ளிட்ட வைத்திய முறைகளை செய்து வருகிறார். இவரிடம் பிஜேபி பிரமுகர்கள் பலர் இங்கு வந்து ரகசியமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

“இந்த கோவிலில் பொதுமக்களை வழிபட விடாமல் தடுப்பதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கோவிலை ஒட்டியுள்ள 1.25 ஏக்கர் நிலத்தை இவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார் என்றும், இந்த கோவிலின் உள்ளே யாரும் வழிபட அனுமதிப்பதில்லை என்பதால் சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்கு எண் 14 /2020 வழக்கு உள்ளது.  வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Vice President visit to Purnagiri temple canceled due to Nakkeeran news

துணை ஜனாதிபதி வணங்க வரும் எல்லையம்மன் ஆலயம் ஒருநாளும் பொதுமக்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எல்லையம்மன் ஆலயம் உள்ள சொத்தின் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வருகை என்பது நீதியை நிலை நாட்ட முடியுமா? நீதியை மூடி மறைக்க உதவுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது. பொதுமக்கள் தெய்வ வழிபாடு செய்ய முடியாத ஆலயம்! பாமரன் நுழைய முடியாத ஆலயத்திற்கு ஒரு வார காலமாக அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் வேலை செய்வதும் அதற்காக அரசின் பணம் செலவிடப்படுவதும், அரசு ஊழியர்களையும் காவலர்களையும் இரவு முழுக்க தூக்கம் இன்றி வேலை வாங்குவதும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசிற்கும் அழகல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் இந்த கோவிலுக்கு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்தில் ‘புவனகிரிக்கு வரும் குடியரசு துணைத் தலைவர்; மீண்டும் ஒரு சர்ச்சை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவிருந்த துணைக் குடியரசுத் தலைவரின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.