ADVERTISEMENT

'180 டிகிரி பிரதமர்' - மோடியை கலாய்த்த அகிலேஷ்!

05:41 PM May 09, 2019 | santhoshb@nakk…

உத்தரப்பிரதேஷ மாநில முன்னாள் முதல்வரும் ,சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பிரதமர் நரேந்திர மோடியை "180 பிரதமர்" என கிண்டலடித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் "நமது பிரதமர் நல்லவர்" . அவர் தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் அமைச்சராக இருக்கிறார். அவர் வாக்குறுதிகளாக என்ன பேசுகிறாரோ , அதற்கு நேர் எதிராக நடப்பார் . அதனால் தான் அவரை "180 டிகிரி" பிரதமர் என கூறினேன். கோடிக்கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். ஆனால் பண மதிப்பிழப்பு என்ற பேரிடரை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நக்சலை ஒழிக்கும் , தீவிரவாதத்தை அழிக்கும் என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதே போல் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் சட்ட பிரமாணங்கள் மற்றும் அரசியல் சாசன பிரமாணங்கள் என இரண்டையும் எடுத்துக் கொள்வதாகவும். இதில் சில நேரங்களில் எதைப் பயன்படுத்துவது என்று பாஜகவினர்களுக்கு தெரியாமல் போய் விடுவதாக அகிலேஷ் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என அகிலேஷ் கூறினார்.கடந்த கால மக்களவை வரலாற்றை திரும்பிப் பார்த்தோமே ஆனால் உத்தரபிரதேச சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் யாருக்கு ஆதரவோ அவர்களே பிரதமர் ஆகின்றனர். இதற்கு காரணம் இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிரதேச மாநிலம் சுமார் 80 மக்களவை தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தான் பிரதமராக பதவி ஏற்க தயார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதை மையமாக வைத்தே அகிலேஷ் தங்கள் மாநிலத்தில் இருந்து அடுத்த பிரதமர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT