இப்போதுதான் பிரதமர் மோடி முதன் முறையாக இந்த நாட்டிற்கு செல்கிறார்....

modi

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது இன்று பதவியேற்கிறார். இந்திய பிரதமர் மோடிக்கு இந்த பதவிஎயேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை பிரதமர் மோடி விமானத்தில் புறப்பட்டார். மாலத்தீவின் தலைநகர் மாலியில் இந்த நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. பிரதமர் மோடி பிரதமாரக பதவியெற்று இந்த நாட்டுக்கு முதல் முறையாக செல்வது குறிப்பிடத்தக்கது.

Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe