
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்தார் ஆறு பேருடன் பெங்களூர் வந்திருந்த பொழுது பந்திப்பூர் வனவியல் பூங்கா அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பித்தனர் என்பதுகுறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)