இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் இருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான "பிரிட்டிஷ் ஹெரால்ட்", உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்? என்ற கேள்வியை தனது வாசகர்களிடம் முன் வைத்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன.

Advertisment

british herald

இவர்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக 31 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

india pm

Advertisment

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 29 சதவீதத்துடன் 2-ம் இடத்தையும், அமெரிக்க அதிபர் டிரம்ப் 21.9 சதவீதத்துடன் 3-வது இடத்தையும், சீன அதிபர் ஜிங்பிங் 18.1 சதவீதத்துடன் 4-வது இடத்தையும் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழ் நிறுவனம் தனது இதழின் முதல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படத்துடன் கூடிய இதழின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.