கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் சில தகவல்களை மக்களிடம் பகிரவுள்ளதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். தற்போது நாளை காலை 9 மணிக்கு வீடியோ மூலம் மக்களிடம் சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.