Advertisment

குழந்தையின் உயிரை காக்க 6 கோடி வரியை ரத்து செய்த பிரதமர் மோடி!

pm modi

மஹாராஷ்டிராவைச்சேர்ந்ததீரா காமத்என்ற ஐந்து வயது குழந்தைக்கு மரபணு ரீதியிலானநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து அந்தக் குழந்தைக்கு சிகிச்சையளிக்க, அமெரிக்காவிலிருந்து 16 கோடிமதிப்புள்ளமருந்தைவாங்க வேண்டிய சூழல்ஏற்பட்டது. இதற்கான பணத்தை அக்குழந்தையின் பெற்றோர் க்ரவுட்ஃபண்டிங் (crowd funding) மூலமாக திரட்டினார். மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்துபெற்றோர், பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு6 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. மும்பைமுன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குழந்தையின் பெற்றோர் மேற்கொண்டு பணம் செலவழிக்க முடியாமல் இருப்பதால், ஜி.எஸ்.டி வரியைரத்து செய்ய வேண்டுமென்றுபிரதமர் மோடிக்கு எழுதினார். இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, உயிர்காக்கும் மருந்துக்குவரி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அரிதானமரபணுநோய்க்கானமருந்து குறித்து. வெளிநாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கானமருந்து சமீபத்தில் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. அதிக விலை கொண்ட அம்மருந்து இந்தியமக்கள் மற்றும் பிரதமரின்அன்பால்அக்குழந்தைக்குக் கிடைக்கஇருக்கிறது.

tax GST Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe