Advertisment

ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி - பாகிஸ்தானுக்கு பதிலடி தருவது தொடர்பாக நடக்கப்போகும் ஆலோசனை!

narendra modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரக்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 6ஆம் தேதிஇந்தப் பயணம் தொடங்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பயணத்தின்போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தைஇருநாட்டுதலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தைப் பிரதமர் வெளியிடுவதற்கு வசதியாக, அவர் அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்பு ஒப்பந்தம் மீதான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளைமுடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் அலுவலகம் விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஸ்ரீநகரிலிருந்து தங்கள் நாட்டின் வழியாக விமானங்களை அனுமதிக்க பாகிஸ்தான் மறுத்துவரும் நிலையில், அதற்குப் பதிலடியாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்துபிரதமர் மோடியும், ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள்

Advertisment

மேலும் பிரதமர் மோடி, துபாய் எக்ஸ்போவையும் பார்வையிட உள்ளதாக அந்தவட்டாரங்கள் கூறியுள்ளன.

uae
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe