Advertisment

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

pm modi  tweet about Pulwama incident

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத்தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe