கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் மனித இனத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வதுஎன்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியில் முன்னேறியுள்ள அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

PM Modi tweet about corona

ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், "ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள போதுமான உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளது" என ட்வீட் செய்திருந்தார். இதை ரீட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி "கரோனாவை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளதேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். ஒன்றாக இருந்து கரோனா தொற்றை தோற்கடிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.