Advertisment

காங்கிரஸ் தலைவருக்காக உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய பிரதமர் மோடி!

pm modi in tears

மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிவடையும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி, இன்று (09.02.2021) நடைபெற்றது. இந்த நிகழ்வில்பிரதமர் மோடி உரையாற்றினார்.

Advertisment

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமானகுலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றோடுமுடிவடைகிறது. அவரைப் பற்றிபேசியபோது பிரதமர் மோடி, உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

Advertisment

பிரதமர் மோடி குலாம்நபிஆசாத்குறித்து, "எனக்குப் பல ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத்தைதெரியும். நாங்கள் ஒன்றாக முதல்வர்களாக இருந்தோம்.குஜராத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் சிக்கிக்கொண்டபோது ஆசாத் எடுத்த முயற்சிகளையும்,பிரணாப் முகர்ஜி எடுத்த முயற்சிகளையும் ஒருபோதும் மறக்க முடியாது. குலாம் நபிஆசாத்தொடர்ந்து அதனைப் பின்தொடர்ந்தார். தனது சொந்தக் குடும்பத்தினர் சிக்கிக் கொண்டதைப் போல அவர் கவலைப்பட்டார்.

உயர் பதவி வரும், அதிகாரம் வரும். இவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை குலாம் நபி ஆசாத் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நான் அவரை ஒரு உண்மையான நண்பராக கருதுகிறேன். அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பைஏற்பவர், அவரதுபணிகளை ஈடுசெய்ய சிரமப்படுவர். ஏனெனில் அவர் தனது கட்சியைப் பற்றி மட்டுமல்ல, நாடு மற்றும் நாடாளுமன்றஅவைபற்றியும் அக்கறை கொண்டிருந்தார்." எனக் கூறினார்.

தனதுபேச்சின்நடுவே உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி, கண்ணீர் சிந்தினார்.

gulam nabi azad Narendra Modi Rajya Sabha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe