மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள, புகழ்பெற்ற விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (19.02.2021) நடைபெற்றது. இந்த விழாவில்இந்தியப் பிரதமர் மோடி, காணொலிகாட்சி மூலமாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிய தேசியக் கல்விக் கொள்கைசுயசார்பு இந்தியாவின் முக்கியபடி எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றியஉரை வருமாறு:
இந்தப் பட்டமளிப்பு விழாவில்பங்கேற்பது மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இன்று விழாவில் பங்கேற்க நான் தனிப்பட்ட முறையில் அங்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் புதிய விதிகள் (கரோனா) காரணமாக நான் காணொலி மூலமாக இந்த நிகழ்வில் பங்கேற்கிறேன்.
உலகெங்கிலும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் பலர் உயர் கல்வி கற்றவர்கள்;அதிக திறமையானவர்கள். மறுபுறம், கரோனா போன்ற ஒரு தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலேயே வாழ்பவர்களும் உள்ளனர். இது சித்தாந்தத்தைப் பற்றியது அல்ல, மனநிலையைப் பற்றியது.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது, உங்கள் மனநிலை நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதைப் பொறுத்தது. நாம் பிரச்சினையின் ஒரு பகுதியாகஇருக்க வேண்டுமா அல்லது தீர்வாக இருக்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது நம் கையில் உள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கைசுயசார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியபடியாகும். இது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வலு சேர்க்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.