/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/m.jpg)
இந்திய பிரதமர் மோடி, பாஜகவுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். வருகின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக நிதியை திரட்ட தொடங்கியுள்ளது. மக்களிடம் நிதியை பெறுவதற்காக மொபைல் ஆப் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்பின் வழியேதான் மோடி பாஜகவுக்கு ரூ.1000 நிதியளித்துள்ளார். நிதியளித்தது மட்டும் இல்லாமல், பொதுமக்களிடம் பாஜகவுக்கு நன்கொடை அளியுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்த மொபைல் ஆப்பின் மூலம் ரூ. 5 முதல் ரூ. 1000 வரை கட்சிக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் பங்களிப்பும், ஆதரவும் தொண்டர்கள் நாட்டுக்குச் சிறந்த முறையில் தொண்டாற்ற உதவும் என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)