Advertisment

கரோனாவுக்குப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணம் - பிரதமர் மோடி மகிழ்ச்சி!

pm modi

இந்திய பிரதமர் மோடி, வெளிநாட்டுப் பயணங்களுக்காகஎதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருபவர். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த பிரதமர் மோடி, அதன்பிறகுசுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. கடந்த வருடம் கரோனா பரவலால் பிரதமர் மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.

Advertisment

இந்தநிலையில், வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி அந்தநாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இது கரோனாவிற்குப் பிறகான அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.

Advertisment

இதுகுறித்து பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில், மார்ச் 26,27 ஆகிய தேதிகளில், நான் வங்கதேசத்திற்குச் செல்கிறேன்.இந்தியாவுடன்ஆழ்ந்த கலாச்சார, மொழியியல் உறவை, மக்களுக்குள்ளான உறவைப் பகிர்ந்துகொள்ளும்நட்புமிகு அண்டை நாட்டிற்கு, கரோனாவிற்குப் பிறகான எனது முதல் வெளிநாட்டுப் பயணம் அமைந்ததில்மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும் வங்கதேச அதிபரை சந்திப்பதுடன், மற்ற உயர்பொறுப்புகளில் உள்ளவர்களையும் சந்தித்து உரையாட இருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, "எனதுபயணம், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் வங்கதேசம் அடைந்துள்ள வியப்பூட்டும் பொருளாதார மற்றும் வளர்ச்சி ரீதியிலான முன்னேற்றங்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக மட்டுமல்லாமல், இந்தச் சாதனைகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை அளிக்கும் வகையில் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Bangladesh Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe