Advertisment

மூன்று வருடங்களுக்கு பிறகு புதுச்சேரியில் பிரதமர்!

pm modi

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisment

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனிவிமானம் மூலம் புதுச்சேரி சென்றடைந்தார். அங்கு ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்றுள்ள மோடி, புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தொடங்கிவைப்பதோடு, சில மக்கள்நலத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு அங்கு பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.கடந்த 2018- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரிக்குப் பிரதமர் மோடி சென்ற நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று (25.02.2021) மீண்டும் புதுச்சேரி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அதைத் தொடர்ந்து, இன்று (25/02/2021) பிற்பகல் கோவையில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

Narendra Modi Puducherry tamizhisai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe