குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கான வழியனுப்புதல் விழா இன்று நடைபெற்றது.
இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கான வழியனுப்புதல் விழா மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு சிறப்பாகச் செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார். இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் தன்னுடைய பொறுப்புகளைச் சிறப்பாக கையாண்டதாகவும் பாராட்டினார்.