Advertisment

கண்ணில் பட்ட வாட்டர் பாட்டில்... களத்தில் இறங்கிய பிரதமர்... வைரலாகும் வீடியோ

pm Modi picks up litter at the newly launched ITPO tunnel

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடைபெற்ற சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது அங்கு சிதறிக்கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisment

டெல்லியின் பிரகதி மைதான் பகுதியில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு சுரங்கப்பாதையும், ஐந்து சிறு சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டே முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இத்திட்டம் ஆறு முறை தள்ளிவைக்கப்பட்டு அண்மையில் பணிகள் மொத்தமும் முடிக்கப்பட்டன. 1.6 கிமீ நீளமான இந்த சுரங்கப்பாதை டெல்லியின் மதுரா சாலை மற்றும் பைரோன் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு நொய்டா, இந்தியா கேட், காஜியாபாத் போன்ற மற்ற பகுதிகளுக்கும் மக்கள் எளிமையாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சுரங்கப்பாதையின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி இதனைத் திறந்து வைத்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, சோம் பிரகாஷ், அனுப்ரியா படேல் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதற்கிடையில், புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி பார்வையிடுகையில் அங்கிருந்த குப்பைகளை அவர் வெறும் கைகளால் அகற்றியுள்ளார். சுரங்கப்பாதையில் நடந்து செல்கையில் அங்கு போடப்பட்டிருந்த காலி தண்ணீர் பாட்டில் மற்றும் பிற குப்பைகளை அவர் அப்புறப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Delhi modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe