pm modi mourns for maradona

பிரபல கால்பந்து வீரரான மரடோனா இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் சிகிச்சையிலிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார். 60 வயதான மரடோனாவின் இறப்பு உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மரடோனா குறித்த தனது இரங்கல் செய்தியில், பிரதமர் மோடி, "மரடோனா கால்பந்தின் மேஸ்ட்ரோவாக இருந்தார், அவர் உலகளாவிய புகழ்வாய்ந்தவராக இருந்தார். அவரது வாழ்க்கை முழுவதும், கால்பந்து மைதானத்தில் பல அதிசிறந்த தருணங்களை நமக்காகக் கொடுத்தவர். அவரது திடீர் மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment